பற்றி எரியும் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்கள் எவை? வெளியானது தகவல்
negombo
pearl ship
seashore
polyethylene
By Sumithiran
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வீழ்ந்த சில பொதிகள் நீர்கொழும்பு உட்பட கடலோரப் பிரதேசங்களில் கரையொதுங்கியுள்ளன.
அவற்றின் பல பொதிகள் அப்பிரதேச மக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறித்த பொதிகளில் இருந்தது என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Low Density Polyethylene எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் மற்றும் மத்திய அடர்த்தி கொண்ட பொதித்தீன் என்பன கரையொதுங்கிய பொதிகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொதிகள், தண்ணீர் போத்தல், ஷொப்பிங் பை, மின்சார கேபிள்கள் என பலவற்றை உற்பத்தி செய்ய முடியும்.
இவற்றை குறைந்தது ஒரு கிலோ 30 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்