அழிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் முக்கிய தரவுகள்: விசாரணையில் அம்பலம்
தெற்காசியாவில் மிக மோசமான கடல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ள் (Express Pearl) கப்பலில் தீப்பிடித்ததையடுத்து அதன் தரவு அமைப்பு மற்றும் ஏராளமான மின்னஞ்சல் செய்திகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் (Madhava Thennakon) கொழும்பு மேலதிக நீதவான் (Colombo Additional Magistrate) கெமிந்த பெரேரா (Keminda Perera) முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவு சமர்ப்பித்த நிபுணர் அறிக்கை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் தடயவியல் சோதனையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
தரவுகளை நீக்கியது யார் யார் யாருடைய நலனுக்காக இது செய்யப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ரகசிய காவல்துறை
மற்றும் தகுதி வாய்ந்த சர்வதேச அல்லது உள்ளூர் நிறுவனம் மூலம் இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.
VTMS இயந்திரம் அல்லது கப்பல் போக்குவரத்து மேலாண்மை தரவு அமைப்பு மற்றும் கப்பலின் மாலுமி வசம் இருந்த VDR (Vessel Data Recorder) தரவு அமைப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் தொடர்பாக உள்ளூர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பல மின்னஞ்சல் செய்திகளும் காணாமல் போயுள்ளதாக தடயவியல் விசாரணை உறுதிப்படுத்தியுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
கப்பலின் மாலுமி உள்ளூர் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி மற்றும் உள்ளூர் முகவரமைப்பின் ஒருமித்த பிரதிநிதிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |