எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு -நீதி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
x press pearl
justice ministry
fax
By Jaso
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி மூழ்கியுள்ள எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதிப்பை மதிப்பிடுவதற்கும் ஐந்து உப குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு சம்பந்தமாக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தகவல்களை வழங்கலாம். இதற்காக பக்ஸ் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இலக்கம் 0112 44 54 47 என்பதாகும்.
இதேவேளை மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களை வழங்க முடியும் அந்த மின்னஞ்சல் முகவரி reformsShmog.gov.lk என்பதாகும். தகவல்களை இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் வழங்க முடியும் என்று நீதியமைச்சு அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி