200 கடல்வாழ் உயிரினங்களின் உயிரைப்பறித்த எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல்
death
shark
turtles
x press pearl
By Sumithiran
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே தீப்பற்றி கடலில் மூழ்கிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலினால் இதுவரை 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
எக்ஸ்பிறஸ் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுப்பிரிவின் சார்பான பிரதி சொலிசிடர் ஜெனரல் மாதவ தென்னக்கோன், இந்த தகவலை வெளியிட்டார்.
176 கடலாமைகள், 4 சுறாக்கள் மற்றும் 20 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி நாடளாவிய ரீதியில் சுமார் 26 விசாரணைகள் நீதிமன்றங்களில் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி