யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் காணப்படும் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்கு வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiya Rasamanickam) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியடைமால் இருப்பதற்கு போக்குவரத்து நெரிசல் முக்கிய காரணமாகும்.
யாழ்ப்பாணத்திலிருந்து 8 மணித்தியாலம் பயணம் மேற்கொண்டு கொழும்புக்குச் செல்ல வேண்டும்.
2013 ஆம் ஆண்டு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையினுடைய அமைச்சரவை முன்மொழிவு இருந்தது.
மொனராகலை பிரதேசத்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கும் தம்புள்ளை ஊடாக வடக்கை நோக்கி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கவூம் முன்மொழியப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
