நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய கப்ரால்- பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
srilanka
travel ban
politcs
cabral
By Kiruththikan
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பாணை இன்று திங்கட்கிழமை (18) அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கப்ரால் மீதான வெளிநாட்டு பயணத் தடை 2022 மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் முன்னாள் ஆளுநர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவ்ல இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்