மக்களுக்கு பணத்தாசை காட்டி பல கோடிகளை மோசடி செய்த இளைஞன்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Money
By pavan
கஹதுட்டுவ பாலகம பிரதேசத்தில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 70 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கஹதுட்டுவ காவல்துறையினர் நேற்று (14) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
பாலகம பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் சிலர் வந்து குழப்பமான முறையில் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலை
28 வயதான இந்த நபருக்கு பணம் வழங்கியுள்ளதாக கஹதுட்டுவ காவல்துறையினருக்கு ஏற்கனவே பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (15) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி