கடுமையான வெப்பம் : கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் அபாயங்களைக் குறைப்பதற்காக முன்னர் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உடனடியாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில அதிபர்கள் இந்தப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு வந்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
பாடசாலை நேரங்களில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகவே இந்த அறிவுறுத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
பிரதி அமைச்சர் வலியுறுத்தல்
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு அலட்சியமும் மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில் மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பாடசாலை அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்