அவதானமாக இருங்கள்! யாழில் உச்சம் தொடும் வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மதியம் வடக்கு, வடமத்திய, வட மேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மனித உடல் உணரும் வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு தண்ணீர்
எனவே சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும் வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் முடிந்தவரை வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு (Heat Cramps) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெப்பமான வானிலை காரணமாக வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்