வெண்மைக்காக ஏமாறும் பெண்கள் - வெளியாகியுள்ள முக்கிய எச்சரிக்கை..!
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
வெண்மையாக்கும் முகப் பூச்சு
சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்