முகம் பிரகாசமாக இருக்க வேண்டுமா...இதை பயன்படுத்துங்க போதும் உடனடி பலன்!
முக அழகை பராமரிக்க ஆண்கள் பெண்கள் என அனைவருமே முயற்சி செய்வார்கள்.
அதற்கு இரசாயனம் கலந்த க்ரீம்கள், சவர்காரங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும், பாதிப்புகள் தான் அதிகம் ஏற்படுகின்றது.
எனவே வீட்டிலுள்ள இயற்கையான பொருட்கள் மூலம் முகத்தை பிரகாசமாக்கலாம்.
குங்குமப்பூவின் நன்மைகள்
குங்குமப்பூ முக அழகை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
கரும்புள்ளிகள் மற்றும் முக கருமை போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது.
குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி சூரியனால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதுடன் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
இயற்கையான பிரகாசம்
எனவே குங்குமப்பூ, தயிர், தேன், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பொருட்களை சிறிதளவு எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
முகத்தை சுத்தமான நீரினால் கழுவிய பின்னர் இந்த கலவையை முகத்தில் பூசவும்.
கலவையை பூசி 10 நிமிடம் ஊறவைத்த பின்னர் சுத்தமான நீரினால் கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு 3 முறை இந்த கலவையை பயன்படுத்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |