உலகளவில் திடீரென செயலிழந்த facebook
மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Faceook) இன்று சிறிது நேரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக கூறப்படுகிறது.
உலகளாவிய பேஸ்புக் செயலிழப்பிற்கான காரணம் தொடர்பில், மெட்டா எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
மெட்டா அதிகாரப்பூர்வ அறிக்கை
இதேவேளை அமெரிக்காவிலேயே அதிகளவிலான பயனர்களுக்கு பேஸ்புக் செயலிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிற்பகல் 2:00 மணி முதல் பேஸ்புக்கில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.
பலர் உள்நுழைவதில் செயலியைப் பயன்படுத்துவதில் மற்றும் வலைத்தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பேஸ்புக் செயலிழந்தமைக்கு தொழில்நுட்ப, சேர்வர் சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் அடிப்படைப் பிரச்சனையா என்பது தொடர்பாகவும் நிறுவனம் இன்னும் எதனையும் கூறவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
