முகநூல் மூலம் ஒழுங்குசெய்த சட்டவிரோத போதைப்பொருள் விருந்து - யுவதி ஒருவருக்கு பாலியல் அத்துமீறல்
சட்டவிரோதமான முறையில் முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றில் பங்குபற்றியவர்களை பாணந்துறை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் 09 சிறுமிகள் உட்பட 34 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (04) அதிகாலை குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை

குறித்த சோதனையில், கஞ்சா, குஷ் மற்றும் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், கைதான சிறுவர்களை அவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்தபின் விடுவிக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.