மீண்டும் வழமைக்கு திரும்பிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்!
புதிய இணைப்பு
உலகளாவிய ரீதியில் முடங்கியிருந்த முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.
மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான அண்டி ஸ்டோன் இதனை தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த செயலிகள் தற்காலிகமாக முடங்கியிருந்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
Earlier today, a technical issue caused people to have difficulty accessing some of our services. We resolved the issue as quickly as possible for everyone who was impacted, and we apologize for any inconvenience. https://t.co/ybyyAZNAMn
— Andy Stone (@andymstone) March 5, 2024
இரண்டாம் இணைப்பு
சர்வதேச ரீதியில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் முடங்கியுள்ள நிலையில், குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்புவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான அண்டி ஸ்டோன் இதனை தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த செயலிகளின் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
We're aware people are having trouble accessing our services. We are working on this now.
— Andy Stone (@andymstone) March 5, 2024
இந்த நிலையில், அண்டி ஸ்டோனின் பதிவை கேளிக்குட்படுத்தும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவொன்றையிட்டுள்ளமை தற்போது வைரலாகி வருகிறது.
— Elon Musk (@elonmusk) March 5, 2024
முதலாம் இணைப்பு
சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
இதனால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (5) இரவு சுமார் 9.19 (இலங்கை நேரப்படி) மணி முதல் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் பதிவுகள்
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் #facebookdown #facebook #instagramdown போன்ற ஹேஸ் டக்குகளை பயனர்கள் பதிவிட்டு வருகினர்.
எனினும், எக்ஸ், வட்ஸ்அப், யூரியுப் உள்ளிட்ட மேலும் சில செயலிகள் எந்தவொரு தடையுமின்றி வழமை போல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்புவது குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |