ஒத்திவைக்கப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சைகள்! மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
மேல் மாகாணங்களின் அரச பாடசாலைகளில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பரீட்சைகளின் முதல் பாகம் நாளை (6) மற்றும் நாளை மறுதினம் (7) நடைபெறவுள்ளன.
அத்துடன், குறித்த இரண்டு பாடங்களினதும் இரண்டாம் பாகம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கசிந்த வினாத்தாள்கள்
மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தர மாணவர்களின் விஞ்ஞான பரீட்சை கடந்த முதலாம் திகதி நடைபெற்றிருந்ததையடுத்து, குறித்த பரீட்சை வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தன.
இதையடுத்து, நேற்றைய தினம் (4) மற்றும் இன்று (5) நடைபெறவிருந்த விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களின் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை திணைக்களம் ஆரம்பித்திருந்தது.
பரீட்சை திகதிகள்
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளின் முதலாம் பாகம் நாளை (6) மற்றும் நாளை மறுதினமும் (7), குறித்த பரீட்சைகளின் இரண்டாம் பாகம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |