தொடர் குண்டு வெடிப்பு மிரட்டல்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு வந்த போலி குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
குண்டு மிரட்டல்கள் குறித்த மின்னஞ்சல்கள் கண்டி மாவட்ட செயலகம், பூஜாபிட்டிய, நாவலப்பிட்டி மற்றும் பஸ்பாகே கோரல பிரதேச செயலகங்கள் மற்றும் டிசம்பர் 26 அன்று கத்தார் ஏர்வேஸ் விமானம் ஆகியவற்றுக்கு வந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சைபர் குற்றப் புலனாய்வு விசாரணை
நாட்டில் பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சியாக சந்தேகிக்கப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மின்னஞ்சல்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாக காவல்துறை வெளிப்படுத்திய தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் காவல்துறையினர் இது குறித்து தனக்குத் தெரிவிக்கவில்லை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |