போலி நாணயங்களுடன் சிக்கிய நபர் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka Police
Money
By pavan
மோதர, றொக்ஹவுஸ் லேனில் 27 போலி நாணயங்களுடன் ஒருவரை மோதர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை (15) சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபரிடம் 5000 ரூபா பணத்தாள்கள் 27 இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) போலி நாணயத்தாள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி