அரசாங்க விரோத பிரசாரம்: சிஐடிக்கு சென்ற முறைப்பாடு!
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விலைமனுக்கோரல் முறையில் விற்பனை செய்தமை தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையான்றை வெளியிட்டுள்ளது.
கடந்த கால ஆட்சிகளுக்குள் மக்கள் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சொகுசு வாகனங்களை மக்கள் பணத்தில் பராமரித்து அவற்றை பயன்படுத்திய மற்றும் வீணடித்து சிதையும் நிலைக்கு உள்ளாக்கிய மோசடிக் குழுக்கள் தங்களது, வரப்பிரசாதங்களை இழந்திருக்கும் நிலையில், குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது இந்த போலி பிரச்சாரத்தில் தெரியவந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போலிப் பிரசாரம் செய்வோரை பயன்படுத்தி தங்கள் கைகளில் கிடைக்கின்ற எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தை அவதூறு செய்வதற்கான பயன்படுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிஐடியில் முறைப்பாடு
இந்த நிலைக்கு மத்தியில் போலி பத்திரிகை செய்தியிடல் மற்றும் உண்மைக்கு புறம்பான சமூக ஊடக செயல்பாடுகளை புறக்கணிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இவ்வாறான விரோத்துடன் கூடிய பிரசாரங்களை செய்து மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கின்றமைக்கு எதிராக தற்போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
