கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் போலி -சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவிப்பு
Colombo
Gotabaya Rajapaksa
President of Sri lanka
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பானது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இதனை சபாநாயகரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் மாலைதீவின் சபாநாயகர் முகமட் நஷீத் கூட கோட்டாபய பதவி விலகல் டிதத்தை அனுப்பியுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பானனது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என என அதிபர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
