இலங்கையின் தமிழர் பகுதிகளில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு வீதம் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன் பிறந்த குழந்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2024 இல் அது 2,20,761 ஆகக் குறைந்து 33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளமையால் ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம் என முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இதற்கு பொருளாதார சுமை, வேலைவாய்ப்பு, குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் போன்ற பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே செல்கின்றது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் சனத்தொகை வீழ்ச்சி என்பது வெளிப்படையாக தெரிகின்ற நிலையில் ஏனைய மாவட்டங்களில் சனத்தொகை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் சனத்தொகை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.
வடக்கிலே இடம்பெற்றுள்ள யுத்தம் ஏராளமானோரை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ள நிலையானது இன்று வரை தொடர்கின்றது.
இந்த சனத்தொகை வீழ்ச்சியானது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இது குறித்த மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
