மரணத்தில் முடிந்த காதல் விவகாரம்
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கிரிபத்கொடை பகுதியில் நேற்றிரவு (07) கள்ள காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
முந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் நேற்றிரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து குறித்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்துக்கு இலக்கான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் கத்தியால் குத்திய பின்னர் அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி, மற்றொரு கட்டிடத்தின் கூரையில் அதன் வழியாக நடந்து செல்லும் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
