சிறுமி துஷ்பிரயோகம் குடும்பஸ்தருக்கு 45 வருட சிறை
பதின்ம வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியமை நிரூபிக்கப்பட்டதால் திருமணமான நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் ரணதுங்க நாற்பத்தைந்து (45) வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றவர் நொச்சியாகம காவல்துறை பிரிவில் வசிக்கும் குடும்பஸ்தராவார்.
45 வருடங்கள் சிறைத்தண்டனை
கடந்த 2017.01.08 ஆம் திகதி முதல் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளியின் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்களும் எந்த ஒரு சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் தலா பதினைந்து (15) வருடங்கள் வீதம் மொத்தமாக 45 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் நஷ்டஈட்டுத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் தண்டம்செலுத்தவேண்டும் எனவும் இத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
ஐந்து வருட காலமாக நடைபெற்ற விசாரணை
கடந்த ஐந்து வருட காலமாக இந்த
வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்ததுடன் ஆரம்பகட்ட விசாரணைகள் நொச்சியாகம நீதிமன்றத்திலும் மேலதிக விசாரணைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலும் நடைபெற்றன. நொச்சியாகம காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்திருந்தமை குறிப்பி
டத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
