சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தை
Trincomalee
Little girl
Abused
Court Judge
By Mkkamshan
திருகோணமலையில் அயல் வீட்டில் வசித்து வந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்கள் மூதூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டனர்.
சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது இம்மாதம் 13 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி