ஐ.பி.எல் 2026 முதல் தகுதிச்சுற்றில் RCB வரலாற்று வெற்றி
இந்தியாவின் தர்மசாலாவில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல் 2026 பிளேஓஃப் சுற்றின் முதல் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்த போட்டியில் ஆர்.சி.பி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றிலேயே அதிகபட்ச ஓட்டங்களாக இற்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
ரஜத் பதிதர்
இந்த ஆட்டத்தில் RCB அணி தலைவர் ரஜத் பதிதர் 33 பந்துகளில் 93* ஓட்டங்களை குவித்து அதிரடியாக அணியை வழிநடத்தினார்.
Even Virat Kohli can't believe that Rajat Patidar six 🤌pic.twitter.com/8gcwvsLAvs
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 26, 2026
விராட் கோலி 43 மற்றும் க்ருணால் பாண்டியா 43 என சிறப்பான பங்களிப்பை அணிக்காக வழங்கினர்.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு தொடர்களில் 600+ ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி இன்று தனதாக்கினார்.
இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய GTஅணி, பவர்பிளேயில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை சந்தித்தது.
தகுதிச்சுற்று 2
GT அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் தலைவர் ஷுப்மன் கில் சோபிக்கத் தவறினார்.

எனினும் ராகுல் திவாட்யா 68 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி GT அணி 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
RCB சார்பாக ஜேக்கப் டஃபி மூன்று விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ரசிக் டார் மற்றும் க்ருணால் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதிப் போட்டியில் இடம் பிடிப்பதற்காக, GT அணி இப்போது தகுதிச்சுற்று 2-ல் எலிமினேட்டர் போட்டியின்(SRH VS RR) வெற்றியாளருடன் மோதும்.