திடீரென வீங்கிய வயிறு - யாழ். போதனாவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
Tamils
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Thulsi
வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
திடீரென வயிறு வீக்கம்
இந்நிலையில் 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
