மின்சாரம் தாக்கிய 21 வயதுடைய இளைஞருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
யாழில் (Jaffna) மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மின் கோளாறு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் யாழ். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்த வேளை மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இதையடுத்து, அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
