மட்டக்களப்பில் போதைபொருள் விவகாரத்தில் சிக்கிய தந்தை - மகன்
மட்டக்களப்பில் (Batticaloa) மகன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் தந்தை போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு கருவப்பங்கேணியை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த 49 வயதுடையவர் எனவும் இணங்காணப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் கொஸ்தாப்பர் சமரபந்து தலைமையில் ஜயசிங்க மற்றும் ரதன் உட்பட்ட குழுவினர் இரவு நகர் பகுதியில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொறுப்பதிகாரி
இதன்போது பை ஒன்றுடன் நடந்து வந்த நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, வியாபாரத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட 21 கிராம் ஜஸ் போதை பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரின் 22 வயதுடைய மகன் மற்றும் லயன்ஸ் கிளப் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜஸ் போதை பொருளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தடுப்புக் காவல்
இந்தநிலையில் அதே பகுதியில் குறித்த இளைஞரின் தந்தையாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அனுமதி கோரியுள்ளனர்.
இதனடிப்படையில், எதிர்வரும் 25 ஆம் திகதிவரை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
