அமெரிக்க காவல்துறையால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் (France) ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அமெரிக்க (United States) காவல்துறையினரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து, பிரான்ஸ் தூதரகத்துக்கு காரில் அவர் புறப்பட்டுள்ளார்.
காவல்துறையினரிடம் விசாரணை
இதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த வழியாக செல்வதால் போக்குவரத்தை நியூயார்க் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, இம்மானுவேல் மக்ரோனையும் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த இம்மானுவேல் மக்ரோன் காரை விட்டு இறங்கி காவல்துறையினரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள்
இதையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் செல்வதற்காக வீதியை மறித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்பு, சாலையில் இருந்தவாறே இம்மானுவேல் மக்ரோன், ட்ரம்புக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடந்து சென்றவாரே ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் அவர் உரையாடியுள்ளார்.
அப்போது பாதசாரிகள் இம்மானுவேல் மக்ரோனுடன் புகைப்படங்களை எடுத்துகொண்ட நிலையில் அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
