விவசாய நவீனமயமாக்கல் திட்டம்: இலங்கைக்கு கிடைக்கவுள்ள உதவி
இலங்கையில் (srilanka) முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் (Bangladesh) ஆதரவளிக்கும் என அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி (New Delhi) சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை (10) காலை நடைபெற்றுள்ளது.
இதன்போதே பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்த உறுதிமொழியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி உள்ளார்.
விவசாயத்துறை நிபுணர்கள் குழு
அத்துடன், கூட்டுறவு முறையின் அடிப்படையில் பங்களாதேஷில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆராய்ந்து இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இலங்கை விவசாயத்துறை நிபுணர்கள் குழுவொன்றை பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கும் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததன் பின்னர் பங்களாதேஷுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், பங்களாதேஷின் தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பிரதமர் ரணில் ,விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை - பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |