விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாவிற்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரக்கறி விவசாயிகள்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் நாமல் கருணாரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம்முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம் அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |