ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் - நிதிஷ் ராணா தெரிவித்த விடயம்!
ஐ பி எல் போட்டிகள் மிக விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, சில போட்டிகளில் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகளும் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், நேற்றைய தினம் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணிக்கு முதலாவது ஓவரினை கொல்கத்தா அணியின் தலைவர் நிதிஷ் ராணா வீசி இருந்தார்.
ஜெய்ஸ்வாலின் அதிரடி
ராணா வீசிய முதலாவது ஓவரினை ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி இருந்தார், முதலாவது ஓவரில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.
தொடர்ந்து ஓட்டங்களை குவித்த ஜெய்ஸ்வால், 13 பந்தில் அரைச்சதம் கடந்ததுடன், ஐ பி எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் எனும் சாதனையை படைத்திருந்தார்.
நிதிஷ் ராணா
"ஒரு பகுதி நேர பந்துவீச்சாளராக, அண்மைய நாட்களில் மிகச் சிறப்பாக பிரகாசித்துக்கொண்டிருக்கும் ஜெய்ஸ்வாலை ஆச்சரியப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் நான் முதல் ஓவரை வீசினேன்.
ஆனால், எனது திட்டம் பலனளிக்கவில்லை, இது ஜெய்ஸ்வாலுக்கான நாள்." இவ்வாறு கொல்கத்தா அணியின் தலைவர் நிதிஷ் ராணா கூறினார்.
