ஐ பி எல் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் - ராஜஸ்தான் வீரர் சாதனை
இன்று நடைபெற்ற ஐபி எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் 13 பந்துகளில் இந்த அரை சதத்தை கடந்துள்ளார்.
அதிவேக அரைசதம் மூலம்
ஏற்கனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஜெய்ஸ்வால், தற்போது அதிவேக அரைசதம் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுலின் சாதனையை 21 வயதான ஜெய்ஷ்வால் முறியடித்துள்ளார்.
மற்றுமொரு சாதனை
இதேவேளை வீசப்பட்ட முதல் ஓவரில் முதல் 2 பந்தில் சிக்சர், அடுத்த 2 பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் இரண்டு ஓட்டங்கள் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி என முதல் ஓவரில் ராஜஸ்தான் அணியும், ஜெய்ஷ்வாலும 26 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஷ்வால் பெற்றுள்ளார்.
விராட் கோலி பாராட்டு
இவரின் இந்த சாதனை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி, "கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த துடுப்பாட்டம் இதுதான். மிகச்சிறந்த திறமையாளர் ஜெய்ஸ்வால்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 09 விக்கெட்டுக்களால் கொல்கத்தாவை வீழ்த்தியது. இதில் அதிவேக அரைச்சத்தை அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 98 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது