தெருவோர கடைகளில் உணவு உண்ட ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த கதி
துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் ஒன்று அவர்கள் சாப்பிட்ட பிரபல உணவினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவு ஒன்று அவர்களில் மூன்று பேர் உயிரைப் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட நிலை
இதன்போது பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி அவர்கள் நான்குபேரும் food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தம்பதியரின் 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
தாயும் பலி
அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் பிள்ளைகளின் தாயும் உயிரிழக்க, அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக துருக்கி நீதித்துறை அமைச்சரான Yilmaz Tunc தெரிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன், அந்தக் குடும்பத்தினர் சாப்பிட்ட கடைகளில் வேலை செய்துவரும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Yilmaz Tunc தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |