பதின்மவயது சிறுமி வன்புணர்வு : இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை
பதின்ம வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவலுடன் கூடிய சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு இருபதாயிரம் ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தவும், தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவும், தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இழப்பீடு வழங்காவிடின் மேலும் சிறைத்தண்டனை
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சுதத் ரோஹண என்ற நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. கடுவலை, வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், பணம் செலுத்தப்படாவிட்டால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

