சிமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியால் பலியான தந்தை மற்றும் மகன்
கோர விபத்தில் சிக்கி தந்தை மற்றும் மகன் ஸ்தலத்தில் பலியான துயரம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனுமே உயிரிழந்தவர்களாவர்.
பாரவூர்தி டயர் வெடித்து வீதியை விட்டு விலகி
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த இந்த பாரவூர்தி டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரவூர்தியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |