மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று திங்கட்கிழமை (01) இரவு மட்டக்களப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட யுவதி காவல்துறை மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
[L0A1AEK ]
சட்ட நடவடிக்கை
இதையடுத்து காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் இருந்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை காவல்நிலையத்திற்கு சம்பவ தினமான நேற்று இரவு வரவழைத்து கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தையார் தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வருவதால் அவருடன் இருக்க முடியாது என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசித்த போது அவர் ஆபாச படங்கள் வீடியோக்களை அதிகமாக தரை இறக்கம் செய்து வைத்திருந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |