சொந்த பிள்ளைகளையே கொடூரமாக தாக்கி தந்தை செய்த காரியம்
தனது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(07) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திம்புல பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் உள்ள தனது மனைவி வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேகநபரின் தந்தையே கடந்த 5ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
காரணம்
09 மற்றும் 05 வயதுடைய இரண்டு பிள்ளைகளை தாக்கிய சந்தேக நபரின் மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பிள்ளைகளும் பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும், சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள கார் சுத்தம் செய்யும் நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை, இரண்டு பிள்ளைகளும் தந்தையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத காரணத்தினால் சந்தேகத்திற்கிடமான தந்தையால் தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
லிதுல காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களையும் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைத்து சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக திம்புல பத்தனை காவல் நிலைய கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |