கொட்டியது குளவி : ஒரே மகனை காப்பாற்ற முற்பட்ட தந்தைக்கு நேர்ந்த துயரம்
தனது மகனை குளவிகள் கொட்டியதை நேரே கண்ட தந்தை மகனை காப்ாற்ற முற்பட்ட நிலையில் அவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குளவி தாக்குதலுக்கு உள்ளான மகன்
பதினொரு வயதுடைய ஒரே மகன் தனது வீட்டின் முன் உள்ள சாலையில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளவித் தாக்குதலுக்கு உள்ளானார், மகனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை சம்பவ இடத்திற்கு வந்தார்.

குளவித் தாக்குதலிலிருந்து தனது மகனைக் காப்பாற்ற தந்தை தனது சட்டையைக் கழற்றி மகனைப் பாதுகாத்தார்.
மகனை காக்கச்சென்று உயிரை விட்ட தந்தை
பின்னர், ஒன்றுகூடிய அப்பகுதிவாசிகள், குளவித் தாக்குதலிலிருந்து தந்தை மற்றும் மகன் இருவரையும் காப்பாற்றி, மிஹிந்தலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர், அங்கு தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குளவித் தாக்குதலுக்கு உள்ளான மகனை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றவும் மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவத்தில் துரதிஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர் இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர். இந்த வீட்டில் தந்தையும் மகனும் மட்டுமே வசிப்பதாகவும், தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 1 மணி நேரம் முன்