காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்
Tamils
Vavuniya
Death
By Independent Writer
வவுனியாவில் (Vavuniya) காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட மகன்
இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்