யாழில் கொடூரம் - பெற்ற பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்த தந்தை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனது 6 வயது பெண் பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண் குழந்தை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna ) சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - இளவாலை காவல்துறை பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் நடந்துள்ளது.
வாயிலிருந்து நுரை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 6 வயதான பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே பிள்ளை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார்.
அவரை கைது செய்ய இளவாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
