அதிகாலை நேர்ந்த பயங்கரம் : மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
ஹாலிஎல - கல உட பகுதியில் மகனின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 53 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாய்த்தர்க்கம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில்,தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி