வன்முறையின் தந்தை மகிந்த வெளியே -அமைதிவழி போராளிகள் உள்ளே -சஜித் கவலை

Mahinda Rajapaksa Sajith Premadasa SL Protest
By Sumithiran Aug 04, 2022 09:53 AM GMT
Report

வன்முறைகளுக்கு காரணமான தந்தை மகிந்த

அமைதிவழியாக போராட்டம் நடத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வன்முறைகளுக்கு காரணமான தந்தை மகிந்த ராஜபக்ச,சுதந்திரமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பார்வையிடுவதற்காக இன்று கொழும்பு கோட்டை காவல்நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்முறையின் தந்தை மகிந்த வெளியே -அமைதிவழி போராளிகள் உள்ளே -சஜித் கவலை | Father Of Violence Mahinda Rajapaksha Is Out

அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்து

அமைதியாகவும், நாகரிகமாகவும் போராட்டம் மேற்கொண்ட ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்தமைக்கும், தற்போதைய வன்முறை சார் அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுவதற்குமான காரணம் என்ன?

மனிதநேயத்தின் பெயரால் நாடு குறித்து சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில், எதேச்சாதிகாரமாக அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

வன்முறையின் தந்தை மகிந்த வெளியே -அமைதிவழி போராளிகள் உள்ளே -சஜித் கவலை | Father Of Violence Mahinda Rajapaksha Is Out

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிபராகுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அன்று அவர் கைது செய்யப்பட்ட போது ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தால், இன்று அது அவ்வாறு இழக்கப்படாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

வெடிகுண்டுகள், வாள்கள், துப்பாக்கி ரவைகள் போன்றவற்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது வரை தொடரும் வன்முறைச் சுழற்சியை ஆரம்பித்தது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் தெரிவித்தார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமையுண்டு

எந்தவொரு குடிமகனும் தான் கருதும் கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதற்காக முன் நிற்கவும், பேசவும், ஒன்று கூடவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமையுண்டு. வன்முறையற்ற அகிம்சை வழியில் போராடும் உரிமையை யாராலும் மீற முடியாது. ஜோசப் ஸ்டாலின் தனக்குள்ள உரிமைகளை நாட்டுக்காக ஜனநாயக முறையில் பயன்படுத்தினார் எனவும், அந்த உரிமையை எவராலும் எதிர்க்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015