தந்தையின் இறுதிக் கிரியைக்கு சென்ற இராணுவ வீரருக்கு நேர்ந்த அவலம்! (படங்கள்)
கெக்கிராவ, பொட்டனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(30) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் கெக்கிராவ பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் பிரதான பயிற்றுவிப்பாளரே உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் முகாமில் கடமையாற்றும் பிரதம பயிற்றுவிப்பாளரான டி.எம்.டி. செனவிரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக

கெக்கிராவ பொத்தனேகம பிரதேசத்தில் உள்ள வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இராணுவ அதிகாரி கெக்கிராவ ரத்மல்கந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகள் முலம் தெரியவந்துள்ளது.
இரத்மல்கந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இறந்தவரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக விடுமுறையில் சென்று திரும்பும் போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணை

உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (30) இடம்பெறவிருந்த நிலையில், உத்தியோகபூர்வ பணிகளுக்காக இன்று காலை கெக்கிராவ இராணுவ முகாமிற்குச் செல்வதற்காக உந்துருளியில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.