ரஷ்யாவின் நிழல் கப்பற்படையை சிதறடித்த உக்ரேனிய ட்ரோன்கள்!
ரஷ்யாவின் நிழல் கப்பற்படையைச் சேர்ந்த பன்னிரண்டு எண்ணெய் கப்பல்களை கடந்த இரண்டு நாட்களில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாகக் கீவ் இராணுவம் தெரிவித்துள்ளது.
அசோவ் கடலில், சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்ட குறித்த எட்டு கப்பல்களைத் தாக்கியதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
அந்த கப்பல்கள், ஒவ்வொன்றும் சுமார் 7,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை ஆகும்.
அவசரநிலை அறிவிப்பு
அசோவ் கடல் என்பது கிரிமியா மற்றும் தெற்கு உக்ரேனின் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரஷ்யப் படைகளுக்கான ஒரு முக்கிய விநியோகப் பாதையாகும்.

Image Credit: Bloomberg
சமீபத்திய வாரங்களில் உக்ரைன், கிரிமியாவில் உள்ள தளவாடங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது அங்கு எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கான முக்கிய மையமாக விளங்கும் அந்த தீபகற்பத்தில் அவசரநிலையை அறிவிக்க அதிகாரிகளைத் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |