காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு
Colombo
Jaffna
Train
By Dharu
காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று(07.07.2026) வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். தேவி தொடர்ந்து சேவை
முன்னதாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ். தேவி தொடர்ந்து சேவை மே 11 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான தொடருந்து சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அத்தோடு, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |