நாமலுக்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Namal Rajapaksa
Sri Lanka Politician
Law and Order
By Shalini Balachandran
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று (07-07-2026) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ நடைமுறை
இதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் அரசுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் உத்தியோகபூர்வ நடைமுறையின் ஊடாக அழைப்பாணைகளை அனுப்புமாறு நீதிபதி மேலதிக உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |