பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்கு அருகில் குண்டு வெடிப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருக்கவிருந்த ஹோட்டலுக்கு அருகே வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் இன்று (07-07-2026) இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், புகை மூட்டம் எழும்புவதைக் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டதன் பின்னர் டமாஸ்கஸிற்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதலாவது முக்கியத் தலைவர் மக்ரோன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |