சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!

Sri Lanka Law and Order High Court of Sri Lanka
By Shalini Balachandran Jul 07, 2026 05:44 AM GMT
Report

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலைsrsயில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மோதல் - அவசர விவாதத்திற்கு எதிர்க்கட்சி கோரிக்கை

சிறைச்சாலை மோதல் - அவசர விவாதத்திற்கு எதிர்க்கட்சி கோரிக்கை

பிரதிவாதிகள் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதிவாதிகள் மூவரில் ஒவ்வொருவரையும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து வெளிநாட்டுப் பயணத்தடையையும் நீதிபதி விதித்துள்ளார்.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை! | Shasheendra Rajapaksa Indicted In Corruption Case

மேலும், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) ஒகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட கைதிகள்...! சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட கைதிகள்...! சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இழப்பீட்டுக் கோரிக்கை

இந்த வழக்கில் சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகாம ஆகியோரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்படி பிரதிவாதிகள் தங்களது அதிகாரப்பூர்வ செல்வாக்கைப் பயன்படுத்தி இழப்பீட்டுப் பணியகத்தின் சில அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை! | Shasheendra Rajapaksa Indicted In Corruption Case

கடந்த 2022 மே 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளின் போது செவனகல - கிரிஇப்பான்வெவ பகுதியில் உள்ள சிறிலங்கா மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் உட்பட சேதமடைந்த சொத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சொத்துக்கான இழப்பீட்டுக் கோரிக்கை முன்னதாக நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும் பிரதிவாதிகள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலை களமிறக்குவோம்...! மஹிந்தவுக்கு பிமல் சாட்டையடி

நாமலை களமிறக்குவோம்...! மஹிந்தவுக்கு பிமல் சாட்டையடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021