நான்கு வயது மகளை துன்புறுத்திய தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோசமான சித்திரவதை
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முற்பகுதியில் மனைவி கணவனையும் மகளையும் விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து தன்னுடன் இருந்த மகளை தந்தை மிக மோசமாக சித்திரவதை புரிந்து அடித்து துன்புறுத்திய கானொணி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை அடுத்து , சிறுமியை தாக்கிய தந்தை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட
பின்னர் சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஊடாக சிறுவர்
காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்