விமல் வீரவன்சவின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் பெப்28
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதா?இல்லையா ? என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் (28) ஆம் திகதி வெளியிடப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.
அந்த வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி நவரத்தின மாத சிங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டத்தரணியின் எதிர்ப்பு
இதன்போது விமல் வீரவன்சவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினரை அரசாங்க ஊழியராக பொருள் கொள்ள முடியாதெனவும் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாதென்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அடிப்படை எதிர்ப்புடன் சம்பந்தப்பட்ட எழுத்து மூல அறிக்கை இரு தரப்பு சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றின் அறிவிப்பு
அதனையடுத்து மேற்படி வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? இல்லையா? என்ற தீர்மானத்தை பெப்ரவரி (28) வெளியிடுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மேற்படி வழக்கை
கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்தமை குறிப்பிடத்
தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
